தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பால் மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

*சுற்றுலாபயணிகள் குளிக்க தடை

நெல்லை : குற்றாலத்தில் கடந்த வாரம் சாரல் நன்றாக பெய்த நிலையில், 2 நாட்களாக வெயில் அடித்தது. நேற்று மதியம் வரை நல்ல வெயில் காணப்பட்டது.
மதியத்திற்கு பிறகு வெயில் மறைந்து திடீரென மேக கூட்டம் திரண்டு காணப்பட்டது. மாலையில் சாரல் பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலை, குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலைக்கு பிறகு சாரல் பெய்தது. இதனால் அனைத்து அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது.

இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி காணப்பட்டது. மதியம் வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை நன்றாக இருந்தது. அவர்கள் சாரலில் நனைந்தபடி அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் தொடர் மழையால் நேற்றிரவு மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
பழைய குற்றாலத்தில் இரவு நேரத்தில் குளிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்