உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் டிஜிட்டல் நூலகம் திறப்பு

சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற மாநில உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உள்ள நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் டிஜிட்டல் நூலகத்தை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று காலை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்