திருப்புவனத்தில் அகோரி ஆசிரமம் திறப்பு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே அகோரி ஒருவர் ஆசிரமம் திறக்கப்பட்ட சம்பவம், அப்பகுதிமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இமயமலை மற்றும் உ.பி மாநிலம் வாரணாசி பகுதிகளில் அகோரிகள் எனப்படும் சாமியார்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் நகர் பகுதிகளுக்கு வருவதே இல்லை. அப்படிப்பட்ட மதுரையை அகோரி பாக்யநாதன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து நேற்று திறப்பு விழா நடத்தியுள்ளார்.

ஆசிரமத்தின் திறப்புவிழா கடந்த மே 31ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு படையல் பூஜையுடன் தொடங்கியுள்ளது. நேற்று காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடந்து, காலை 8 மணிக்கு சிறு குழந்தையை வைத்து மடம் திறக்கப்பட்டது. பின் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு பூஜையுடன் தீபாராதனை காட்டப்பட்டது. கைலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்ட

இவ்விழாவில், உள்ளூர் மக்கள் யாரும் பங்கேற்கவில்லை. மதுரையை சேர்ந்த சிலர் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்திற்கு எப்போதாவது விசேஷ நாட்களில் வரும் அகோரிகள், உடனடியாக வட மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வர். அப்படி இருக்கும் நிலையில், அகோரி ஒருவர் இலந்தைக்குளம் கிராமத்தில் மடம் அமைத்து தங்கியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!