வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வெள்ளத்தில் புத்தகம் இழந்தவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரையாண்டு விடுமுறையை அடுத்து தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு கணக்கெடுக்கப்படுகிறது. புத்தகங்கள் வழங்க கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி