நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

சென்னை: நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 நோட்டுகளில் 93% திரும்பப் பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31வரை ரூ. 23.32 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ. 2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளில் 87%வைப்புத் தொகையாகவும், 13%பிறமதிப்பு நோட்டுகளாவும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். ரூ. 2,000 நோட்டுகளை செப்டம்பர் 30வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு