தமிழ்நாட்டில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 இடங்களில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னனை, திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சோதனையின்போது லேப்டாப், 8 சிம் கார்டுகள், 7 மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதவலர்களாக செயல்பட்ட விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு தலைமை அதிகாரிகள் இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனையில் ஈடுப்பட்டார்கள். சென்னை, திருச்சி, தென்காசி, கோவை, சிவகங்கை ஆகிய 6க்கு மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு தொடர்புடைய நிர்வாகிகள் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் பிரபலமாக பார்க்கப்படும் சாட்டை துரைமுருகன் மற்றும் விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடுகளிலும் இந்த சோதனை என்பது நடைபெற்றது.

சோதனை நடைபெற்று பின்னர் அவர்களை விசாரணைக்கு வருமாறு வரும் 5 மற்றும் 7ம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டு அந்த சோதனை என்பது நிறைவு பெற்றது. இந்த சோதனை தொடர்பாக தற்போது அதிகாரப்பூர்வமாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சேலத்தில் மூன்று பேர் எல்.டி.டி. தொடர்புடைய நபர்கள் நாட்டுத்துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்.டி.டி. போன்ற அமைப்புடன் தொடர்புடையது அம்பலமானது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்

பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விபத்து: 15 நாளில் 7வது சம்பவம்