தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரை தடுக்க என்ன வழி?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறதா? தடுக்க என்ன வழி? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியில் கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க தவறினால் கூவமாக மாறிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Related posts

குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி தீவிரம்: நெல்லிற்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

அடுத்த மாதம் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை; நெல்லை – கொல்லம் பகல் நேர நேரடி ரயில்களை தொடங்கி வைப்பாரா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

குன்னூர் சாலையில் யானை முகாம்: அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்