தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது. இதையடுத்து அவர்களது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பலத்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக இந்த விவகாரத்தில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ததோடு, வழக்குகளைத் தள்ளுபடி செய்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உட்பட தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உறுதியாகியுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை