தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி.. ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பதற்றம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி: திருமாவளவன்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பதற்றம் ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துகளை முதலமைச்சருடன் பகிர்ந்துகொண்டேன். ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் கூட அரசியல் திட்டம் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினேன் என திருமாவளவன் தெரிவித்தார்.

பதற்றத்தை ஏற்படுத்த சில கட்சிகள் திட்டம்: திருமாவளவன்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்படுகின்றன என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த உடனே பகுஜன் சமாஜ் கட்சி கேட்பதற்கு முன்பாகவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக கேட்டது என்றும் அவர் கூறினார்.

ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: திருமா.
ஆருத்ரா கோல்டு மோசடியில் தொடர்புடையவர்கள் பா.ஜ.க.வில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியிலும் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வும் வலிந்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க பாஜக முயற்சி: திருமா.
திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சிக்கிறது. கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரிகம் என திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எப்படியாவது பதற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது என அவர் கூறினார். சட்டம் – ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். மேலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு உதவும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினோம். 3 புதிய குற்றவியல் சட்டங்கள் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன. 3 சட்டங்களை ஆய்வுசெய்ய நீதிபதி ஆணையம் அமைத்த முதலமைச்சரின் நடவடிக்கைக்கு வரவேற்கத்தக்கது என திருமாவளவன் கூறியுள்ளார்.

Related posts

யூடியூபர் சங்கர் மீண்டும் கைது

₹30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்..!!