சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறை தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸ் மனுவில் முகாந்திரம் இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது