தினசரி ஆயிரம் ஆயிரமாக எகிறும் பாதிப்பு.. இந்தியாவில் ஒரே நாளில் 8,000ஐ நெருங்கியது கொரோனா கேஸ்கள் : 16 பேர் பலி!!

டெல்லி : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 7,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. காலை 8 மணி நேர நிலவரப்படி, நாட்டில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்ட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,76,002.ஆக உள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40,215.ஆக உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.65 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.83 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,016.-ஐ தொட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மரணங்களும் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா ஒன்றும் கேரளாவில் 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 4,42,04,771 பேர் வீடு திரும்பி உள்ளனர்.சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.09% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 98.72% ஆகவும், இறப்பு விகிதம் 1.19 ஆகவும் உள்ளது. நாடு முழுக்க இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன,” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி