சட்டவிரோத பண பரிமாற்றம் ஜாபர் சாதிக்கின் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. ஜாபர் சாதி மற்றும் சகோதரர் முகமது சலீமை ைகது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, மைதீன் கனி உள்பட சிலரின் பெயரிலும் மற்றும் முகமது முஸ்தபா, ஜமால் முகமது உள்ளிட்ட சில பினாமிகளின் பெயரிலும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.அதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக்கின் ஜெ.எஸ்.எம். ரெசிடென்சி ஓட்டல், சொகுசு பங்களா, விலை உயர்ந்த ஜாக்குவார் மற்றும் மெர்சிடிஸ் போன்ற 7 விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி மதிப்புள்ள 14 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை