சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத காரணத்தால் தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் போதைப்பொருள் வழக்கி ஜாபர்சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை என்றும், அதன் பின்னர் சிறைமாற்ற உத்தரவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போதைப்பொருள் வழக்கில் ஜாமின் பெற்று வெளிவர இருந்த நிலையில் திகார் சிறை நிர்வாகம் அளித்துள்ள சிறைமாற்ற உத்தரவும் காலாவதியாகிவிட்டதாகவும், அந்த காலவதியான உத்தரவு அடிப்படையில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்தது செல்லாது எனவும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜாபர் சாதிக் மனுவுக்கு பதிலளிக்கும் படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது