சட்டவிரோத சுரங்க வழக்கு அரியானா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அரியானாவில் யமுனாநகர் பகுதியில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரியில் சோனிபட் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான சுரேந்தர் பன்வருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் இந்திய தேசிய லோக் தளத்தின் யமுனாநகர் எம்எல்ஏ தில்பாக் சிங்கிற்கு சொந்தமான இடங்களிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5கோடி ரொக்கம், வெளிநாட்டு துப்பாக்கிகள் மற்றும் 300 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்எல்ஏ சுரேந்தர் பன்வாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

* இன்னொரு காங். எம்எல்ஏ வீட்டில் ரூ.1.42கோடி பறிமுதல்

அரியானாவின் மகேந்திரகர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் டான் சிங்(65) 4 முறை எம்எல்ஏ மற்றும் தொழிலதிபரான இவர் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு எதிராக வங்கி கடன் மோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. ராவுக்கு எதிராக டெல்லி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் தவிர குருகிராம் மற்றும் மகேந்திரகர்ரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 18ம் தேதி சோதனை நடத்தினார்கள். ராவ், அவரது மகன் மற்றும் சில நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.1.42கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 30க்கும் மேற்பட்ட பிளாட் மற்றும் நிலங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Related posts

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்

ஆடை வடிவமைப்பு என்பது பெரும் சவால் : ஆடை வடிவமைப்பாளர் வனஜா செல்வராஜ்!!