சட்டவிரோத மதுபான கடை நடத்தும் பாஜ எம்எல்ஏ: பதவியில் இருந்து நீக்க எம்பி பிரக்யா வலியுறுத்தல்

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜ எம்பி பிரக்யா சிங் தாகூர். இவர் வருகிற மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது சில சிறுமிகள் அவரிடம் வந்து தங்களது பள்ளிக்கு எதிரே மதுபான கடை இயங்கி வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றும் என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்றும் மிகவும் பயத்துடன் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய எம்பி பிரக்யா, கஜூரியா காலா பங்களா பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபான கடை பாஜ எம்எல்ஏ சுதேஷ் ராய்க்கு சொந்தமானதாக அதிகாரிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். நான் வெட்ககேடாக உணர்ந்தேன். இதுபோன்ற நபரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். பள்ளிக்கு அருகில் இதுபோன்ற கடைக்கு அனுமதி வழங்க முடியாது என்பதால் இது சட்டவிரோதமானது” என்றார்.

Related posts

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்