இளமை தரும் இலந்தைப் பழம்

*ஆப்பிள், திராட்சை பழங்களை விட இலந்தை பழம் அதிக சத்துக்களை உடையது. அதிக ஊட்டச்சத்து கொண்ட அந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது. இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே இனிக்கும். நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும் பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பழத்தில் கொட்டை பகுதியை சுற்றி சதைப்பகுதி இருக்கும். இது மிகவும் சுவைமிகுந்தது.

* இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. A,B,C,B3, B6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கமின்மையில் அவதிப்படுவோருக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கமும் வரும். இதை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து இரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியைத் தருகிறது. பஸ்ஸில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலை சுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தைப் பழம் சாப்பிடலாம். உடல் வலியும் நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.

* நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்தப் பழத்தை அளவுக்கு மீறியும் உண்ணக்கூடாது. இதனால் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் குறைவான விலை என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தைப் பழத்தை கிடைக்கும் காலத்தில் சாப்பிடுங்கள். மிகவும் முக்கியம்… அளவோடு சாப்பிட்டு என்றும் இளமையுடன் சந்தோஷமாக இருங்கள்.
கொசுறு செய்தி ‘எலந்தபழம்… எலந்தபழம்… இது செக்கச் செவந்தபழம்… என்று கவியரசு கண்ணதாசன் இலந்தைப் பழத்தின் பெருமையை ஒரு திரைப்படத்தில் எழுதியிருப்பார்.
ஆர். ஜெயசீலி ராணி

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்