ஐஐடியில் சேர அட்வான்ஸ் தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் 260 பேருக்கு ஜெஇஇ பயிற்சி

சென்னை: மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் சுதன் கூறியதாவது: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2021-2022ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களை கண்டறிந்து ஜெஇஇ தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஜெஇஇ மெயின் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 690 பேர் பங்கேற்றனர். அவர்களில் 168 பேர் அட்வான்ஸ் தேர்வை எழுதினர். அதில் தகுதி பெற்ற ஒரு மாணவர் சென்னை ஐஐடியிலும், 12 பேர் திருச்சி என்ஐடியிலும், ஒருவர் வாரங்கல் என்ஐடியிலும் சேர்ந்துள்ளனர். அதேபோல தேசிய சட்டப் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எழுதி தகுதி பெற்ற 4 அரசு பள்ளி மாணவர்கள் முதல் முறையாக திருச்சி தேசிய சட்டப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கான போட்டித் தேர்வை எழுதி 6 அரசுப் பள்ளி மாணவர்கள் முதல்முறையாக சேர்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத 260 அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு ஐஐடி, அண்ணா பல்கலைக் கழக மற்றும் பல்வேறு பயிற்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இதையடுத்து, ஜூன் மாதம் 4ம் தேதி ஜெஇஇ தேர்வு நடக்கிறது இதில் இரண்டு தேர்வுகள் உள்ளன. அவற்றை கட்டாயம் எழுத வேண்டும். முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை இணைய தளம் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது