ஐடி ரிட்டன் ரீபண்ட் வராமல் இருக்கிறதா? வருமான வரித்துறை விளக்கம்

புதுடெல்லி: வருமான வரித்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 2022-23ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கு 7.09 கோடி வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 6.96 கோடி கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, 6.46 கோடி ரிட்டன்கள் செயல்படுத்தப்பட்டு, 2.75 கோடி பேருக்கு ரீபண்ட் பணம் அவரவர் வங்கி கணக்கில் அனுப்பப்பட்டு விட்டது.

இருப்பினும், சிலருக்கு ரீபண்ட் பணம் திரும்ப கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு, முந்தைய சில கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதே காரணம். ரீபண்ட் கிடைக்காதவர்கள், முந்தைய சில கோரிக்கைகள் அல்லது விளக்கங்களுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் ரீபண்ட் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!