ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு விசாரணையின்போது மயங்கிய நீதிபதி

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தனது நீதிமன்ற அறையில் நேற்று வழக்கம் போல் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது தலை வலிப்பதாக கூறிய நீதிபதி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஐகோர்ட் கிளை வளாகத்தில் உள்ள ஆம்புலன்சை வரவழைத்தனர். முதலுதவி சிகிச்சை அளித்தவாறு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கு விசாரணையின்போது நீதிபதி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு