சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜெய் ஷா!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிச.1-ம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்-ஷா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் பொதுச் செயலாளரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெய்ஷா 2019 அக்டோபர் முதல் பிசிசிஐ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினார்.

தற்போது ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே உள்ளார். இவர் 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஐசிசியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் 1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார்.

3 முறை ஐசிசியின் தலைவராக இருந்த கிரேக் பார்கிளே மேலும் ஐசிசி தலைவராக நீடிக்க விரும்பவில்லை என்பதால் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே ஐசிசியின் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை தொடர்ந்து ஜெய்ஷா ஐசிசியின் தலைவராக பதவி வகிக்க உள்ளார். மேலும் 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

Related posts

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்: நாளை தீர்த்தவாரி

ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை

துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம்: தமிழருக்கு பாராட்டு