ஐசிசி டி20 உலக கோப்பை அட்டவணை நியூயார்க்கில் ஜூன் 9ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல்

புதுடெல்லி: ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் ஜூன் 9ம் தேதி நடக்க உள்ள ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 9வது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரை (ஜூன் 1-29) இம்முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. மொத்தம் 9 நகரங்களில் 55 ஆட்டங்கள் நடக்க உள்ள நிலையில், 6 கரீபியன் தீவுகளில் மட்டும் 41 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. டிரினிடாட் & டுபாகோ, கயானாவில் அரையிறுதி, ஜூன் 29ம் தேதி பார்படாசில் இறுதிப்போட்டி நடைபெறும்.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்பட 20 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. போட்டியை இணைந்து நடத்தும் அமெரிக்கா ஜூன் 1ம் தேதி நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் கனடாவை சந்திக்கிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 8 சுற்றில் 2 பிரிவுகளாக மோதவுள்ளன. இந்த சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஏ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா
பி பிரிவு: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்
சி பிரிவு: நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பப்புவா நியூ கினியா
டி பிரிவு: தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம்

Related posts

யூடியூப்பில் அவதூறு கருத்து கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார்

ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

2வது மனைவியை ஆள் வைத்து கடத்திய பாஜ வர்த்தகர் அணி தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்கு: பெண் நிர்வாகியுடன் தொடர்பில் இருப்பது அம்பலம்