கிராமிய வங்கிகளில் 9995 மேனேஜர், அசிஸ்டென்ட்கள்

1. Office Assistant (Multi Purpose) (Group B): வயது: 18 முதல் 28க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. Officer Scale-I (Assistant Manager) (Group A): வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
3. Officer Scale-II (Specialist Officers (Manager)) (Group-A). வயது: 21 லிருந்து 32க்குள். தகுதி: Electronics/Communication/Computer Science/Information Technology ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம்.
4. Officer Scale- II (General Banking) (Group A): வயது: 21 லிருந்து 32க்குள். தகுதி: Agriculture/Horticulture/Dairy/Animal husbandry/Forestry/Veterinary Science/Agricultural Engineering/Pisciculture ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம்.
5. Officer Scale III (Senior Manager) (Manager) (Group-A). வயது: 21 முதல் 40க்குள். தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Banking/Finance/Marketing/Agriculture/Horticulture/Forestry/Animal Husbandry/Veterinary Science/Agricultural Marketing & Co-operation/IT/Management/Law/Economics/Accountancy ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மேனேஜர் பணிக்கு 2 வருடங்களும், சீனியர் மேனேஜர் பணிக்கு 5 வருடங்களும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.6.2024 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை:Office Assistant (Group B) பணிக்கு IBPS ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Officer (Group A) பணிகளுக்கு IBPS ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Officer Scale-I, Office Assistant பணிகளுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வானது Preliminary Exam, Main Exam என இரு கட்டங்களாக நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் Preliminary Exam நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் மெயின் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: Office Assistant (Multi Purpose)- பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175/-.
Officer Scale-I,II, III பணிகளுக்கு: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. இதர பிரிவினருக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.06.2024.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை