ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

ஐஏஎஸ் அதிகாரி சிகி தாமஸ் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரி ஆனந்தகுமார் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், ஐஏஎஸ் விகரம் கபூர் தமிழக சிறுதொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும், மோனிகா ரானா துரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாகவும், சரவணம் சென்னை குடிநீர் வழங்கம் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரிய செயல் இயக்குநராகவும், அர்ச்சனா பட்நாயக்
தொழில்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராகவும், ஐஏஎஸ் அதிகாரி பூஜா குல்கர்னி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராகவும், ஐஏஎஸ் பிரகாஷ் வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராகவும், ஸ்ரீ வெங்கட பிரியா டி.ஆர்.பி. தலைவராகவும், கலையரசி சுகாதாரம் மற்றும் குடுப நலத்துறை சிறப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் புனித யாத்திரை திட்டம்: டெல்டாவில் 8 கோயில்கள் தேர்வு

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது