2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழு, ரூ. 5 கோடி நிவாரண நிதியுடன் கேரளாவுக்கு உதவிக்கரம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: கேரளாவுக்குத் தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு தயாராக உள்ளது என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. அதில் 10 தமிழர்களும் அடங்குவர். அங்குள்ள 3 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.அப்போது, “வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்றே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ‘இன்னும் கணக்கு எடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். மீட்புப் பணிக்கு உதவுவதற்காக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளோம்.முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியும் கேரளத்துக்கு வழங்கியுள்ளோம். இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும்” என்றார்.

Related posts

தொடர்ந்து 4வது முறையாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்: புதிய நியமனம் வரை கவர்னராக நீடிப்பாரா?

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

நித்தியானந்தாவை போல் பிரபலமாக ஆசை என் கனவில் சித்தர்கள் சொன்னதைத் தான் பேசினேன்