மாற்றுத்திறனாளி என போலி சான்றிதழ் : ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா ஹெட்கரின் தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி அதிரடி

டெல்லி : பயிற்சி முடிக்கும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா ஹெட்கரின் தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனது காரில் சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தி சர்ச்சையில் சிக்கியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மாற்றுத்திறனாளிக்கான போலி சான்றிதழ் சமர்ப்பித்து ஐஏஎஸ் ஆனது தெரியவந்தது. இதையடுத்து, பூஜா கேத்கர் ஐஏஎஸ் பயிற்சியை மாநில அரசு நிறுத்தியது. இந்நிலையில், குடிமைப் பணிகள் தேர்வின்போது பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக, பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்இ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் டெல்லி குற்றப்பிரிவு போலீசில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப் பிரிவுகளில் மோசடி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பல்வேறு புகார்களை அடுத்து பூஜா ஹெட்கரின் பயிற்சியை ரத்து
செய்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது யுபிஎஸ்சி. இந்த நிலையில், புகார்கள் உறுதியானதை அடுத்து பூஜா ஹெட்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்தது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம். இனிமேல் போட்டித் தேர்வுகளில் பூஜா பங்கேற்கவும் நிரந்தரத் தடை விதித்து ஒன்றிய அரக பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்