ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு இன்றுடன் முடிகிறது

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 1056 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 20ம் தேதி தொடங்கியது. மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் தேர்வு நடந்தது. கடந்த 20ம் தேதி கட்டுரை வடிவிலான தேர்வும், 21ம் தேதி காலை இரண்டாம் தாள் (பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள் (பொது அறிவு 2) தேர்வும், 22ம் தேதி காலை 4ம் தாள் (பொது அறிவு 3), பிற்பகலில் 5ம் தாள் தேர்வு (பொது அறிவு4) தேர்வும் நடந்தது. நேற்று மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. சென்னையில் நடந்த தேர்வை சுமார் 650 பேர் எழுதினர். நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இந்திய மொழிகளில் ஒரு தாள் தேர்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம் தேர்வும் நடந்தது. கடைசி நாளான இன்று காலை விருப்பப் பாடம் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் விருப்பப் பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு