ஐஏஎஸ்களுக்கு புதிய உத்தரவு; படிப்பு விடுமுறையிலும் நடத்தை விதி மீறக் கூடாது

புதுடெல்லி: படிப்பு விடுப்பிலும் நடத்தை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மீறினால் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் போன்ற அகில இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கு துறை சார்ந்த படிப்பிற்காக விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பு விடுப்பில் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான நடத்தை விதிமுறைகளை அவர்கள் முழுமையாக பின்பற்றுவதில்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கையில், ‘படிப்பு விடுப்பில் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள் கட்டாயம் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற உறுதிமொழிக்கு இணங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி: ஐகோர்ட் தீர்ப்பு

புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை

ஒசூர், சிப்காட் காவல்நிலைய எல்லை பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் 171 சிசிடிவி கேமராக்கள் அமைப்பு: மாவட்ட எஸ்பி தொடக்கி வைத்தார்