நான் முதல்வன் திட்டம் உதவியால் ஐஎப்எஸ் தேர்வில் தஞ்சை வாலிபர் வெற்றி

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கல்லூரணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் புவனேஷ். இவர் சமீபத்தில் நடந்த இந்திய குடிமைப்பணி (ஐஎப்எஸ்) தேர்வில் வெற்றி பெற்று வன அலுவலர் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து புவனேஷ் கூறுகையில்,‘ எனது தந்தை ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர். தாய் ரேணுகா. தம்பி லோகேஸ் எம்பிஏ படித்து வருகிறார். நான் பி.டெக்., எம்.டெக்., படிப்பை சென்னை ஐஐடியில் படித்தேன். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்திய குடிமைப்பணி தேர்வினை 6 முறை எழுதினேன். 6வது முறையாக தற்போது தேர்ச்சி பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு தேர்வெழுத தமிழக அரசின் சார்பில், நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிராமப்புறத்தைச் சேர்ந்த என்னை ஊக்கப்படுத்தி ஐஎப்எஸ் தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,’ என்றார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது