நான் பெண் தான்; தங்கம் வென்ற சர்ச்சை வீராங்கனை உருக்கம்

ஒலிம்பிக்கில் மகளிர் குத்துசண்டை 66 கிலோ எடை பிரிவில் அல்ஜீரியாவின் இமானே கெலிப் பங்கேற்றார். கால்இறுதியில் இவருடன் மோதிய இத்தாலியின் கரினி, கெலிப் தாக்குதலில் நிலைகுலைந்த நிலையில், அவர் பெண் இல்லை ஆண். ஒரு ஆணுடன் மோத வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்நிலையில் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையையும், பைனலில் சீனாவின் யாங்லியூவை 5-0 என வீழ்த்தி தங்கம் வென்றார். வெற்றிக்கு பின் அவர் கூறுகையில், மற்றவர்களை போல் நான் ஒரு பெண்தான். நான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன், இது அவர்களுக்கு(தங்கம் வென்றது) மிகப்பெரிய பதில், என்றார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்