டெல்லியில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூன் 1ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: டெல்லியில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஜூன் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பேச வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள I.N.D.I.A கூட்டணி தலைவர்களோடு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் டெல்லி பயணம் நடைபெற உள்ளது.

ஜூன் 1ம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் நடைபெற கூடிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதன், வாயிலாக பல்வேறு விதமான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஜூன் 1ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று கூடுகிறார்கள். இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அன்று மாலை அல்லது ஜூன் 2ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது