ஹூண்டாய் கிரேட்டா பேஸ்லிப்ட்

ஹூண்டாய் நிறுவனம் 2024ம் ஆண்டுக்கான கிரேட்டா பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் 3 வகையான இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. முதலாவதாக, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், இதுபோல் 1.5 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மூன்றாவதாக, 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 116 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இவற்றில் மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஐவிடி உட்பட இ வேரியண்ட் தொடங்கி எஸ்எக்ஸ் (ஓ) வரை 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.10,99,900 முதல் டாப் வேரியண்ட் சுமார் ரூ.19,99,900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட், பனோரமிக் சன்ரூப், 10.5 அங்குல மல்டி டிஸ்பிளே டிஜிட்டல் கிளஸ்டர் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது