ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி டியோ

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், எக்ஸ்டர் சிஎன்ஜி டியோ என்ற சிஎன்ஜி காரை அறிமுகம் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் இரண்டை சிஎன்ஜி சிலிண்டர் டேங்க் உடன் கூடிய காரை காட்சிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் அதே போன்ற காரை சந்தைப்படுத்தியிருக்கிறது.இந்தக் காரில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது சிஎன்ஜியிலும் இயங்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 69 பிஎஸ் பவரையும், 95.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

சிஎன்ஜிக்கு 3 ஆண்டு வாரண்டியை இந்த நிறுவனம் வழங்குகிறது. சிஎன்ஜியில் கிலோவுக்கு 27.1 கிலோமீட்டர் செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. எலக்ட்ரிக் சன்ரூப், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், ஆட்டோமேட்டிக் தட்பவெப்ப கட்டுப்பாடு, 20.32 செ.மீ தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்டர் நைட் எஸ்எக்ஸ் என மூன்று வேரியண்ட்கள் உள்ளன. ஷோரூம் விலையாக எஸ் வேரியண்ட் சுமார் ரூ.8,50,300, எஸ்எக்ஸ் சுமார் ரூ.9,23,300, எக்ஸ்டர் நைட் எஸ்எக்ஸ் சுமார் ரூ.9,38,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை