ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் கார்

ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா பேஸ்லிப்ட் காரை 2 மாதம் முன்பு அறிமுகம் செய்திருந்தது. இதைத்தொடர்ந்து கிரெட்டா என் லைன் காரை அறிமுகம் செய்ய உள்ளது. கிரெட்டா என்லைன் வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார் இது. வரும் 11ம் தேதி இந்த கார் சந்தைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த காரின் புகைப்படங்கள் இணையதளங்களில் கசித்துள்ளன. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் எம்டி, டிசிடி கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். காரின் உட்புறமும், வெளிப்புறமும் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. விலை விவரம் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் 11ம் தேதி வெளியாகும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!