தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளருக்கு ரூ.221 கோடி சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத் தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசியை எதிர்த்து பாஜக சார்பில் கே.மாதவி லதா போட்டியிடுகிறார். அசாதுதின் ஓவைசி தமக்கு ரூ.23.8 கோடி சொத்து உள்ளதாக வேட்புமனுவில் அறிவித்துள்ளார். ஓவைசியை எதிர்த்து போட்டியிடும் கே.மாதவி லதா தமக்கு ரூ.221 கோடி குடும்ப சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சா வழக்கில் யூடியூபர் சங்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தீவிர கண்காணிப்பு; மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை: பொது சுகாதாரத்துறை தகவல்

அரசுக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் நட்டாவிடம் சரமாரி புகார் எதிரொலி; பாஜவுடனான கூட்டணியை முறித்துவிட ரங்கசாமி முடிவு: சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு ரகசிய தூது