ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

திருமலை: ஐதராபாத் முகல்புரா பகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பாஜக மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாதவிலதாவை ஆதரித்து அமித் ஷா மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் பிரசாரம் செய்தனர். இந்த மேடையில் சிறு குழந்தைகளுக்கு பாஜகவின் தாமரைச் சின்னத்தை வழங்கி தேர்தல் விதிமுறைகளை மீறி யதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் அங்குள்ள மொகல்புரா காவல் நிலையத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, கிஷன் ரெட்டி, பாஜகவின் கோஷா மஹால், எம்எல்ஏ டி ராஜா சிங், வேட்பாளர் மாதவிலதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அமித் ஷா மற்றும் கிஷன் ரெட்டியின்பெயர்களை போலீசார் நீக்கி விசாரனையில் இருந்து இருவருக்கும் விலக்கு அளித்துள்ளனர். இருப்பினும் எம்.எல்.ஏ. ராஜா சிங்கும், பாஜக வேட்பாளராக இருந்து தோல்வி அடைந்த மாதவிலதாவும் விசாரணையை எதிர்கொள்வார்கள்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்