ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ்சில் எடுத்து சென்ற 60 லட்சம் ரூபாய் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

திருமலை: ஆம்னி பஸ்சில் ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற 60 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் வராத நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஆவணங்களின்றி அதிகளவு நகை, பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வதை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி ஆந்திரா-தெலங்கானா மாநில எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்ட எஸ்பி கிருஷ்ணகாந்த் தலைமையிலான போலீசார், பஞ்சலிங்கலா சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தினர். அதில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது சில பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பணத்தை தெலங்கானாவை சேர்ந்த ஜிலானி, சுமன் ஆகியோர் எடுத்து வந்தது தெரிய வந்தது. பைகளில் இருந்த பணத்தை கணக்கிட்டபோது ₹60 லட்சம் ரொக்கம் இருப்பது ெதரிந்தது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது ெதரிந்தது. பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை