ஹைதராபாத் மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள் :

மரினேட் செய்ய தேவையானவை :

மட்டன் – 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
அடித்த கெட்டியான தயிர் – 200 மி.லி
உப்பு – 2 டீஸ்பூன்

மற்ற பொருட்கள் :

வெங்காயம் – 3
பச்சை மிளகாய் -3
சமையல் எண்ணெய் – 4-5 டேபிள் ஸ்பூன்
காரவே விதைகள் (Shahjeera) – 3/4 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் – 6
கிராம்பு – 6
இலவங்கப்பட்டை – 3
பிரியாணி இலை – 2
கசூரி மேத்தி – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – கைப்பிடி
புதினா இலைகள் – கைப்பிடி

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் அலசிய மட்டனை போட்டு அதனுடன் மரினேட் செய்ய எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அடித்த கெட்டியான தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் காரவே விதைகள் போட்டு பொரிந்ததும் கிராம்பு, பட்டை, பச்சை ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கி பழுப்பு நிறமாக மாறியவுடன் மரினேட் செய்யப்பட்ட மட்டனை சேர்த்து நன்றாக கலந்து சுமார் 4 நிமிடங்களுக்கு அதிக வெப்பத்தில் சமைக்கவும்.பிறகு மட்டனை 7 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் தொடர்ந்து சமைக்கவும்.மட்டன் ஓரளவிற்கு வெந்து நிறம் மாறி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய கொத்த மல்லி, புதினா இலைகள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விட்டு மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் சமைக்கவும்.பின்னர் அதனுடன் வறுத்து பொடித்த கசூரி மேத்தியைச் சேர்த்து கலந்து மற்றொரு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.அடுத்து அதில் சிறிதளவு (200 மில்லி) தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி 4 விசில்கள் விடவும்.

Related posts

குதிரைவாலி உப்புமா

வெந்தயக் கீரை பணியாரம்

கேழ்வரகு மிச்சர்