ஹஸ்க்வார்னா நிறுவனம் ஸ்வார்ட்பிலன் 401 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துதுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 398.6 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 39 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. டிராக்ஷன் கண்ட்ரோல், சூப்பர்மோட்டோ ஏபிஎஸ், 5 அங்குல டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் போன் இணைத்துக் கொள்ளும் வசதி, சி -டைப் சார்ஜிங் போர்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.92 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் ராயல் என்பீல்டு கிராம் 411 ஆகியவற்றுக்கு இது போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.