வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் பழங்குடி மக்கள் மனு

திருவள்ளூர்: நயப்பாக்கம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பழங்குடியின மக்கள், வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கரிடம், அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில், பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நயப்பாக்கம் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 10 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.

எங்களுக்கு நயாயப்பாக்கம் பகுதியில் உள்ள இடத்தை வீட்டுமனை பட்டாவாக மாற்றித்தர வேண்டும், தொடுகாடு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை, இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே, நயப்பாக்கம் பகுதியில் நாங்கள் வசிக்கும் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி, அதே இடத்தில் குடியிருக்க எங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்