திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர், பூங்காநகர், பவளமல்லி தெருவில் வசித்து வருபவர் சேவியர் பிரான்சிஸ். இவர் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்து விட்டது. இதனால் பதறிப்போன அவர் உடனடியாக திருவள்ளூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் அளித்த உத்தரவின் பேரில், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநாயகமூர்த்தி, பிரகாஷ், சதீஷ், கார்த்திக், மோகன் பாபு ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று 10 நிமிடத்தில் வீட்டின் பின்புறம் புகுந்த சாரை பாம்பை பக்குவமாக பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.