தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்டது தள்ளுபடி விலையில் ஆவின் பால் விற்பனை: நிர்வாகம் தகவல்

சென்னை: ஆவின் நிறுவனம் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட (யு.எச்.டி) முறையில் தயார் செய்யப்பட்ட பால் (யு.எச்.டி டி.எம். பால்) 450 மி.லி மற்றும் 150 மி.லி அளவுகளில் பின்வரும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட இந்த பாலை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம். எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும்.

உணவகங்கள், பழச்சாறு கடைகள், விடுதிகள், சமையல் வல்லுநர்கள், தொழில் முனைவோர், மலை பிரதேசங்களில் வசிப்போர் மற்றும் மீனவர்கள் இந்த பாலை காய்ச்சாமல் அப்படியே உபயோகிக்க ஏற்றது. எனவே பொதுமக்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட பாலை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பாலுக்கான மொத்த மற்றும் சில்லரை தேவைகளுக்கு 9344617445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்