ஹாட் அண்ட் சௌர் வெஜ் சூப்

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய், கேரட், பீன்ஸ் – தலா 1,
கோஸ் – 2 கப்,
காளான் – 1 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்,
வெங்காயத்தாள் – 1 கப்,
ரெட் சில்லி பேஸ்ட்,
சோயா சாஸ், மிளகுத்தூள் – தலா 1 டீஸ்பூன்,
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு, எண்ணெய், சோள மாவு – தேவைக்கு.

செய்முறை:

காய்கறிகளை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காய வைத்து இஞ்சி, பூண்டு, கேரட், பீன்ஸ், குடை மிளகாய், கோஸ், காளானை போட்டு சிறிது வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சோயா சாஸ், மிளகுத் தூள், உப்பு, வினிகர், ரெட் சில்லி பேஸ்ட், சோள மாவு சேர்த்து, சிறிது கெட்டியாக வந்ததும் இறக்கி, ஸ்ப்ரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.

Related posts

சோயா சங்க்ஸ் பக்கோடா

பனீர் கச்சோரி

பாதாம் அல்வா