ஓசூர் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ.17 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

ஓசூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் விதி மீறி பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், ஓசூர் சிப்காட் அருகே கோவிந்த அக்ரஹாரம் எஸ்எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்கரே தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தனியாருக்கு சொந்தமான குடோனில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (39) என்பவர் அனுமதியின்றி ரூ.17.2 லட்சம் மதிப்பிலான 7830 பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக செல்வகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து பட்டாசு பெட்டிகளை கைப்பற்றி பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

Related posts

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விருது.. திட்டத்தின் ஆழமான தாக்கத்திற்கு விருது என்பது ஒரு சான்றாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி