சுரங்கப் பாதையில் ஹமாஸ் மையம்; காசா மருத்துவமனையில் பிணைக்கைதிகள்: ஆதாரத்தை வெளியிட்டது இஸ்ரேல்


காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் 45வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் ஹமாஸ் இலக்குகளைத் தொடர்ந்து அழித்து வருகின்றனர். பாலஸ்தீன பிரதேசங்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள ரகசிய சுரங்கங்கள், பதுங்கு குழிகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட வீடியோவில், ‘காசா அல் ஷிபா மருத்துவமனையின் அடியில் செயல்படும் சுரங்கப்பாதையில் இரண்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி செல்கின்றனர். மற்றொருவரை அழைத்து செல்கின்றனர்.

இவர்களில் ஒருவர் ேநபாளி, மற்றொருவர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர், தங்களது உத்தரவுகளை பிறப்பிக்கும் மையமாக பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த மருத்துவமனையில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன. தற்போது மருத்துவமனையின் கீழ் செயல்பட்ட 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அல் ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என்ற போர்வையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related posts

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!

பல சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேக்கம்; நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக இடி, மின்னலுடன் மழை: பலத்த காற்றால் 5 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு