மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்..!!

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயகாந்திற்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளியால் இடைவிடாது இருமல் இருந்து வந்ததன் காரணமாக மூன்று நாளாக விஜயகாந்த் சிகிச்சை பெறுகிறார்.

தொண்டை வலியும் இருந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிக்க ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் சளி பாதிப்பு காரணமாக மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவ்வப்போது விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரையீரலில் இருந்து சளி சற்று குறைந்ததன் அடிப்படையில் செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு இன்று காலை முதல் விஜயகாந்த் இயல்பாக மூச்சு விடுவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இன்று மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்