மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை

சென்னை: விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (19). வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். இவர், மருத்துவமனையின் மேல் தளத்தில் சக செவிலியர்களுடன் தங்கி பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவு சாப்பிட சரிதா கீழே வராததால், சக செவிலியர்கள் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கியது தெரிந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* புழுதிவாக்கத்தை சேர்ந்த சிறுமி, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இச்சிறுமி அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி