மருத்துவமனையில் பணி நேரத்தில் குரங்குடன் விளையாடிய 6 செவிலியர்கள் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் குரங்கு குட்டியுடன் விளையாடிய 6 செவிலியா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் அரசு மகளிர் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சில செவிலியர்கள் பணி நேரத்தில் குரங்கு குட்டியுடன் விளையாடியதுடன், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் சீருடை அணிந்த நிலையில், செவிலியர்கள் குரங்கு குட்டியுடன் விளையாடியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, 5 மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. வீடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதால், குரங்குடன் விளையாடிய 6 செவிலியர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Related posts

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு