நாமகிரிப்பேட்டையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை ரேக்ளா பந்தயம்: 57 குதிரைகள் சீறிப்பாய்ந்தன


நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் 57 குதிரைகள் சீறிப்பாய்ந்தன. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் திருநாளான நேற்று குதிரை ரேக்ளா பந்தயம் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் 57 குதிரைகளுடன் கலந்து கொண்டனர். சிறிய குதிரை, பெரிய குதிரை, புதிய குதிரை என 3 பிரிவுகளில், 8 மைல், 10 மைல், 12 மைல் என்று தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்து அதிவேகமாக இலக்கை நோக்கி சென்றது.

பெரிய குதிரை போட்டியில் கோவையை சேர்ந்த கோகுல் முதல் பரிசும், குளித்தலையை சேர்ந்த செல்வம் 2ம் பரிசும், சிறிய குதிரை போட்டியில் பவானியை சேர்ந்த சிங்காரவேல் முதல் பரிசும், புதிய குதிரை போட்டியில் சென்னை ஆறுமுகம் முதல் பரிசும், குமாரபாளையம் சிங்காரவேல் 2ம் பரிசும் பெற்றனர். இவ்வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலைகளின் இருபுறமும் கோஷங்கள் எழுப்பியவாறு கண்டு மகிழ்ந்தனர். ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை