ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் 6 வயது சிறுவன் படுகொலை: கைதான வாலிபர் திடுக் வாக்குமூலம்

தர்மபுரி: தர்மபுரி அருகே, ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை பெற்றோரிடம் சொல்லி விடுவான் என்ற பயத்தில், சிறுவனை கொலை செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே காட்டம்பட்டியைச் சேர்ந்த தம்பதியின் 6 வயது மகன், கடத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16ம் தேதி மாலை வீட்டின் அருகே பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், இரவாகியும் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து தந்தை அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடி வந்தனர்.

இதுதொடர்பாக, அதே கிராமத்தை சேர்ந்த மாதேஷ் மகன் பிரகாஷ்(19) என்பவரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனை கொலை செய்து, அதே பகுதியில் பயன்பாடின்றி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உடலை போட்டதாக பிரகாஷ் தெரிவித்தான். இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன், சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். போலீசாரிடம் பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 16ம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று, ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றேன். அவன் உடன்பட மறுக்கவே கைகளை கயிற்றால் கட்டியும், வாயில் துணியை திணித்தும், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டேன்.

இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறி விடுவான் என்ற பயத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்து, ஆட்கள் நடமாட்டம் குறைந்ததும், உடலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏணி மூலம் ஏறிச்சென்று, உள்ளே போட்டு விட்டு தப்பினேன் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில், வேறு சிலரும் கூட்டு சேர்ந்து கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கூறி, போலீஸ் ஸ்டேஷனை உறவினர்கள் முற்றுகையிட்டனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களை எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் சமரசம் செய்து அனுப்பினார்.

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்