விடுமுறை தினமான நேற்று வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

*3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : விடுமுறை தினமான நேற்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலில் ஆந்திரா மாநிலம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், விடுமுறை தினங்களான நேற்று முன்தினம் மற்றும் நேற்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். எனவே, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் மோர், குடிநீர், குளிர்பானம் ஆகியன கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், பக்தர்களின் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்